மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 42 பேருக்கு நலத்திட்ட உதவி

கோவை, செப்.10: கோவையில் பல்வேறு துறைகளின் கீழ் 42 பயனாளிகளுக்கு ரூ.4.11லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.கோவையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அடையாள அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் ஆத்மா திட்டத்தின் கீழ் தென்னை மரம் ஏறும் கருவி மூன்று பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.12 ஆயிரம்  மதிப்பிலும், மண்புழு உர தொட்டி இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் மொத்தம் 8 ஆயிரம் மதிப்பிலும், ஒரு பயனாளிக்கு பந்தல் காய்கறி சாகுபடி அமைக்க மானியம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் ஒரு பயனாளிக்கு பந்தல் காய்கறி சாகுபடி அமைக்க மானியம் ரூ.80 ஆயிரம் மதிப்பிலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் நலிவுற்ற சிறுபான்மையின பெண்களுக்கு தையல் இயந்திரம், வியபாரம், சிறு தொழில் தொடங்க நிதி உதவி 37 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.4.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: