குண்டும் குழியுமான மாநகர சாலைகள்

கோவை, செப்.10:கோவை மாநகரில் உள்ள பிரதான சாலைகளில் ஏற்பட்டு வரும் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் திருச்சி சாலை, அவினாசி சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன. இவற்றில் சமீபகாலமாக சாலையின் நடுவே திடீர் பள்ளங்கள் உருவாகி வருகிறது. திருச்சி சாலையில் அரசு மருத்துவமனை கேட் முன்பு, லங்கா கார்னர் பாலம் நுழைவாயில், வின்சென்ட் ரோடு, கோட்டை மேடு, கோர்ட் ரவுண்டானா, அண்ணா சிலை, ரயில் நிலையம் முன்பு, பாலசுந்தரம் சாலை, செங்காடு, பெண்கள் பாலிடெக்னிக், சித்தாபுதூர், உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளில் சாலை நடுவே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி வருகின்றன. திடீர் பள்ளங்களால் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மாநகரின் முக்கிய சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகளே பைக் டயர், கருங்கற்கள், மண் ஆகியவற்றை கொண்டு பள்ளங்களை நிரப்பி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: