பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி

கோவை, செப்.10:கோவை பெரியகடை வீதி பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ராஜாமணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பண்டிகை காலங்களில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.  அதன்படி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது. வரும் 12ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை நேற்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

Advertising
Advertising

இதில், அத்திவரதர், அஷ்டலட்சுமி, தசாவாதாரம், ராமர் செட், கல்யாண செட் உள்ளிட்ட பல்வேறு கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான் ,புது டெல்லி, புனே மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்  பொம்மைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. கொலு பொம்மைகளும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.55 லட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுவதாக பூம்புகார் விற்பனை நிலைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: