100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகள்

ஈரோடு, செப். 10: 100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என தமாகா வலியுறுத்தி உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில நிர்வாகிகள் விடியல் சேகர், யுவராஜா, சந்திரசேகர் மற்றும் நிர்வாகிள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

Advertising
Advertising

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காலிங்கராயன் பாசனங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு நெல் நடவு பணிகள் துவங்கி உள்ளது. ஆனால், நெல் நடவு செய்ய ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடவு பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை தற்காலிகமாக விவசாய பணிகளில் குறிப்பாக நடவு பணிகளில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: