வீட்டு வரி ரசீது வழங்க மறுப்பு ஊராட்சி செயலாளர் மீது புகார்

ஈரோடு, செப். 10: சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், எக்கட்டாம்பாளையம் ஊராட்சி சாணார்பாளையம், திருமலைநகரில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில் இது வரை ஊராட்சி நிர்வாகம் வீட்டு வரி ரசீது போட்டுக்கொடுக்காமல் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Advertising
Advertising

இது குறித்து ஊராட்சி செயலாளர் கோவிந்தசாமியிடம் மனு கொடுத்த போது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ரசீது வழங்கிவிட்டு பெரும்பாலானவர்களுக்கு ரசீது வழங்கவில்லை. இதே போல ஊராட்சி பகுதியில் குடிநீர் வசதி, தெருவிளக்கு பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக கூறி திருமால்நகர் பொதுமக்கள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி சென்னிமலை வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: