ரயில் மோதி வாலிபர் பலி

ஈரோடு, செப். 10: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கும், தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயில்மோதி இறந்தது தெரியவந்தது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. சிவப்பு கலர் டீ-சர்ட், கருப்பு கலர் பேண்ட் அணிந்திருந்தார். இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: