ஆதனக்கோட்டையில் சாலையோரத்தில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி மூச்சு திணறலால் பாதிப்பு

கந்தர்வகோட்டை, செப்.10: ஆதனக்கோட்டையில் குப்பைகளை சாலையின் ஓரத்தில் எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். எனவே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தினால் தற்போது அதிகாரிகளின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன. ஊராட்சி தலைவர்கள் என்றால் தினந்தோறும் சென்று பல இடங்களில் கண்காணித்து பணிகளை மேற்கொள்வர் தற்போது அதிகாரிகளுக்கு கூடுதலாக கண்காணிக்கும் பணி இருப்பதால் சம்பவ இடங்களுக்கு நேரிடையாக செல்லும் நிலை இல்லை.

இதனால்தான் துப்புரவு பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் இஷ்டம் போல் நடந்து கொள்கின்றனர். ஆதனக்கோட்டையில் மாரியம்மன் கோவில் எதிராக சாலையின் ஓரத்திலேயே குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் தீ புகை வெகுவாக பரவுகிறது. இவ்வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,road ,
× RELATED பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை