ஆலங்குடியில் 10ம் வகுப்பு மாணவன் மாயம்

புதுக்கோட்டை, செப்.10: ஆலங்குடியில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த பாத்தம்பட்டி ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி(48). இவரது மனைவி ரெஜினாமேரி கே.ராசியங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் இவருடைய மகன் ஹெவின் ஆரோ(15). 10ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் ஹெவின் ஆரோ, தனியார் பஸ்சில் ஆலங்குடிக்கு சென்று, அங்கிருந்து பள்ளி வேன் மூலம் பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற ஹெவின் ஆரோ நேற்று பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் ரெஜினாமேரியிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த ரெஜினாமேரி ஆலங்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஹெவின் ஆரோவை தேடி வருகின்றனர்.

Tags : student ,Alangudi ,
× RELATED மருத்துவ மாணவன் மயங்கி விழுந்து சாவு