ரயில்வே கடைநிலை ஊழியர்களாக 2393 மாஜி ராணுவ வீரர்கள் நியமனம் சலுகைகள் தாராளம் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

அரியலூர், செப். 10: ரயில்வே கடைநிலை ஊழியர்களாக 2,393 மாஜி ராணுவ வீரர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் தற்போது 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக் கிறது. இதில் தண்டவாள பராமரிப் பாளர்கள், பாயிண்ட்ஸ் மேன்கள், எலக் ட்ரிகல், மெக்கானிக்கல் துறை காலாசிகள் பணியிடங்கள் பாதுகாப்பு துறைகளை சார்ந்தவை. இந்த பிரிவில் காலியிடங்கள் உள்ளதால் நிலைமையை சமாளிக்க கடைநிலை ஊழியர்களாக 2393 முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க ரயில்வே வாரியம் தற்போது முடிவு செய்துள்ளது.
மேலும் கடைநிலை பணியாளர்கள் தேர்வு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020ம் ஆண்டு தான் மீண்டும் கடைநிலை பணியாளர்கள் தேர்வு செய்யும் நடைமுறைகள் துவங்கும். இதனால் நிரந்தர ஊழியர்கள் நியமனத்திற்கு உடனடி வாய்ப்பில்லை. அதனால் சிறப்பு விலக்கு பெற்று கடைநிலை ஊழியர்களை தேர்வாணையம் மூலம் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டுமென கோரிக்கை தற்போது பரவலாக எழுந்துள்ளது.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், இதற்கு முன்பு தினக்கூலி அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினரை நிய மிக்க பலமுறை ரயில்வே கோட்டங்கள் விளம்பரம் செய்தன. தினக்கூலி களாக சேர அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கூடுதல் சலுகை களை அறிவித்து தெற்கு ரயில்வே மூத்த பர்சனல் அதிகாரி இந்துமதி கடந்த ஆகஸ்ட் 13 ம் தேதி விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார். மாதாந்திர தொ குப்பு ஊதியமாகபெரு நகரங்களில் ரூ. 22072 , நடுத்தர நகரங்களில் ரூ. 24660 , சிறிய ஊர்களில் ரூ.22968 வழங்கப்படும் ரூ. 5000 சீருடைப்படி தரப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணிக்கு சென்றுவர பயண பாஸ் வழங்கப்படும். பணி நியமத்தமாக வெளியூர் கள் சென்றால் ரூ.500 பேட்டா தரப்படும், வாராந்திர விடுப்பு வழங்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது. முப்படைகளில் ஏதாவது ஒன்றில் குறைந்த்து 15 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். விளம்பரம் வெளியான தேதியில் ஐம்பது வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

நிர்வாகம் வேலையை விட்டு நீக்கினாலோ, இவர்கள் வேலையை விட்டு நின்றாலோ 15 நாட்கள் நோட்டிஸ் அவசியம். மூன்று நாட்கள் தொடர்ந்து பணிக்கு வரவில்லை என்றால் பணி நீக்கம் அதிகாரம் நிர்வாகத்திற்கு உள் ளது எனவும் தெரிவித்து இருக்கிறது. முன்னாள் ராணுவத்தினர் அரசு, பொதுத்துறை மற்றும் தேசிய வங்கிகளில் நிரந்த வேலைகளை இட ஒதுக்கீடுகள் மூலம் பெற்று வருகிறார்கள். இதை விட கூடுதல் சலுகைகள் வேலை உத்ரவாதம் என கருதுவார்கள். இந்த அறிவிப்பு மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமணம் ஆபத்தானது. பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்காத பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்க இயலாது. எனவே ரயில்வே வாரியத்தை அனுகி சிறப்பு விலக்கு பெற்று கடைநிலை ஊழியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு மனோகரன் கூறினார்.

Tags : Maj ,Soldiers ,Railway Staff Employees ,
× RELATED மேலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி...