இலுப்பூர் அருகே கிளிக்குடி- துவரங்குறிச்சி இடையே குண்டும் குழியுமாக மாறிய சாலை

இலுப்பூர், செப். 10: இலுப்பூர் அருகே உள்ள கிளிக்குடி - துவரங்குறிச்சி சேதமடைந்து மண் சாலையாக மாறி விட்டது. இதை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கிளிக்குடி - துவரங்குறிச்சி சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. சிறிது சிறிதாக சேதமடைந்த இந்த சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி மண் சாலையாக மாறி விட்டது.

இதன் வழியே அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. கிளிக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து துவரங்குறிச்சிக்கு பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் இதன் வழியே சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். ஜல்லிகள் சில இடங்களில் அதிகளவு பெயர்ந்து கிடப்பதால் தார் சாலை மண் சாலையாக காட்சி அளிக்கிறது. ஆகவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : road ,Thurankurichi ,Iluppur ,
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே குண்டும் குழியுமான கிராமச் சாலை