புதுகையில் 14ம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

புதுக்கோட்டை, செப்.10: புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வரும் 14ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் உத்தரவின்படி, புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களிடம் தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தன்னார்வ சட்ட பணியாளர்கள், வக்கீல்கள் வழங்கினர்.

Tags : National People's Court ,
× RELATED 14-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்