புதுக்கோட்டை மாவட்டத்தில் நடவு செய்ய தயாராகும் கிணற்று பாசன விவசாயிகள் மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை,செப்.10: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பெய்த மழைவைய வைத்து கொண்டு கிணற்று பாசன விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கவிரிநீர் பாசனத்தை நம்பி விவசாயிகள் உள்ளனர். இதேபோல் திருமயம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை ஆகிய சுற்று வட்டார பகுதியில் வானம் மழையை நம்பி விவசாயிகள் உள்ளனர். அன்னவாசல், விராலிமலை, இலுப்பூர், கீரனூர், குன்றாண்டார்கோவில் ஆகிய பகுதிகளில் கிணற்று பாசனத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் மழையை நம்பி இருந்து விவசாயிகள் தற்போது நெல் விதை வாங்கி விதைத்து வருகின்றனர். இந்நிலையில் கிணற்று பாசனம் உள்ளவர்கள் முன்கூட்டியே நெல்லை விதைத்து இருந்தனர். இது தற்போது நடவு செய்யும் அளவிற்கு நன்கு வளர்ந்துள்ளது.

இந்த மழையை பயன்படுத்திக்கொண்டு அன்னவாசல், விராலிமலை, இலுப்பூர், கிரனூர், குன்றாண்டார்கோவில் பகுதியில் உள்ள விவசாயிகள் வயல்களை இயந்திரங்களை கொண்டு நன்கு உழுது நடவு செய்யும் அளிவிற்கு தயார்படுத்தி வைத்துள்ளனர். ஒரு சில இடங்களில் நடவு செய்ய தொடங்கியுள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் நாற்று பறிக்கும் பணியில் விவசாய பெண்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே தடையில்ல மின்சாரமும், மும்முனை மின்சாரமும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் விதைத்து நாற்று நன்கு வளர்ந்து இருந்தது. கிணற்றில், போதிய தண்ணீர் இல்லாததால் வயல்களை நடவு செய்ய ஏதுவாக எங்களால் தயார்படுத்த முடியவில்லை. தற்போது பெய்த மழையால் வயல்களில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் நன்று ஈரப்பதம் இருந்தது. இதனை பயன்படுத்திகொண்டு கினற்றில் இருக்கம் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி தற்போது வயல்களை நடவு செய்யும் அளவிற்க தாயர்படுத்தியுள்ளோம். இந்த பணியை செய்ய தனியாரிடம் டிராக்டர், பவர்டில்லர் போன்ற இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து அதிக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் போதிய அளவில் இயந்திரங்களை விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்க வேண்டும். மேலும் தற்போது நாற்று பறிக்கும் பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு நூறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்திகொள்ளும் வகையில் அந்த பணியை நிறுத்த மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் நடவுக்கு முன் நிலத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் டிஏபி, யூரியா, பொட்டாஸ் போன்ற உரங்கள் போட வேண்டியுள்ளதால் இந்த உரங்களின் விலை அதிகரித்துள்ளது. குறைந்தவிலையில் உரங்கள் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Pudukkottai district ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டி...