காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் மாயனூரில் இருந்து புதுகை வரை கால்வாய் அமைக்க கோரி பிரசாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

புதுக்கோட்டை, செப்.10: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் மாயனூரில் இருந்து புதுகை வரை கால்வாய் அமைக்க கோரி 22ம்தேதி முதல் தெருமுனை பிரசாரம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தில் முதல் கட்டமாக மாயனூர் காவிரி ஆற்றின் கதவணையில் இருந்து புதுக்கோட்டை வரை கால்வாய் அமைக்க தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி, பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 22ம் தேதி தேதியில் இருந்து 25ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபடுவது, வரும் 27ம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Communist Party of India ,canal ,Pudukku ,Mayanur ,
× RELATED சித்தூர் அடுத்த பூனேபல்லியில்...