க.பரமத்தி பகுதியில் மணல் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

க.பரமத்தி, செப். 10: க.பரமத்தி ஒன்றிய பகுதியில் அனுமதி இன்றி மணல் கொண்டு செல்லப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட அதிகாரிகள் உத்தரவின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் அப்பகுதிக்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சின்னதாராபுரம் டி.பசுபதிபாளையம் பகுதியில் அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியினை போலீசார் வாகன சோதனையிட்டுள்ளனர். அதில் அனுமதியில்லாமல் இரண்டு 2யூனிட் மணல் ஏற்றி கொண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. லாரியை ஓட்டி வந்த முத்துசாமி மகன் ராஜ்குமார்(36), மணல் அள்ள உதவிய ஜேசிபி ஒட்டுனர் அய்யநாதன் மகன் அரவிந்த்(22)ஆகிய இருவர் மீது சின்னதாராபுரம் போலீசார் மணல் திருட்டு வழக்கு பதிந்து கைது செய்ததுடன் லாரி மற்றும் ஜேசிபியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல க.பரமத்தி போலீசார் குப்பம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஒரு டிப்பர் லாரியில் அனுமதியில்லாமல் காவிரி ஆற்று பகுதியில் இருந்து 4 யூனிட் மணல் ஏற்றி கொண்டு விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. லாரியை ஓட்டி வந்த தோட்டக்குறிச்சி ஆரோக்கியசாமி மகன் சுரேஷ்(36), மீது க.பரமத்தி போலீசார் மணல் திருட்டு வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மணல் திருட்டை தடுக்க மனு...