அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கரூர், செப். 10: அசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சிக்கு வரும் 16ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் கரூரில் வரும் 16ம் தேதி வரை மாணவ, மாணவிகள் கீழ்கண்ட தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கை மூலம் சேர்ந்து பயன்பெறலாம். டெஸ்க்டாப் ப்பளிஷிங் ஆபரேட்டர் (பெண்), தையல் தொழில்நுட்பம், (பெண்)ஒரு ஆண்டு. மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் 1 ஆண்டு, ஆபரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின்டூல் 2 ஆண்டு,
பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசு மூலம் உதவித் தொகை ரூ.500 மாதந்தோறும் (வருகை தரும் நாட்களுக்கு ஏற்ப) பேருந்து கட்டண சலுகை, இலவச மிதிவண்டி, மடிகணினி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், சீருடை ஒரு செட் மற்றும் இலவச காலணி ஒரு செட் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கரூரில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை நேரில் வந்து பயிற்சியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Govt ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி