திருவாரூரில் 29ம்தேதி தவ்ஹீத் ஜமாத் மாநாடு

திருவாரூர்,செப். 10: தீவிரவாதத்திற்கு எதிராக வரும் 29ம் தேதி திருவாரூரில் மாநாடு நடத்த உள்ளதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட குழு கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் பீர் முகமது தலைமையில் நடைபெற்றது.மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹீம், மாநில செயலாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நாட்டில் நடைபெற்று வரும் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடுவது, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் மற்றும் தனி நபர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்பதுடன் இது குறித்து வரும் 29 ம்தேதி திருவாரூரில் மாநாடு ஒன்றினை நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Tawheed Jamaat Conference ,Thiruvarur ,
× RELATED திருவாரூரில் இன்றும், நாளையும்...