ராகுகால பரமேஸ்வரி அம்மனுக்கு பொன்னூஞ்சல் உற்சவம்

கும்பகோணம், செப். 10: கும்பகோணம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் மகாமக விழாவுக்கு தொடர்புடைய கோயிலாகும். இங்குள்ள காமாட்சியம்மன் கோயிலில் உள்ள ராகுகால பரமேஸ்வரி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம், மஞ்சள் காப்பு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரம் செய்வது வழக்கம்.
இதையொட்டி ஆகஸ்ட் 18ம் தேதி முதல் பூச்சொரிதல் விழா நடந்தது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பொன்னூஞ்சல் திருவிழா சேவை உற்சவம் நடந்தது. இதைதொடர்ந்து மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Rangula Parameswari ,festival ,Amman ,
× RELATED அம்மன் கல்லூரியில் பொங்கல் விழா