×

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

அரியலூர், செப். 10: செந்துறை பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்ய வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி செந்துறை பேருந்து நிலையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டாத்தில் விபத்துகளை குறைக்கவும், கனரக வாகன நெருக்கடிகளை சமாளிக்கவும் செந்துறையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். செந்துறை - அரியலூர் நெடுஞ்சாயில் அதிக சிமெண்ட் ஆலை கனரக வாகனங்கள் செல்வதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். செந்துறை அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்துக்க்கு இருவர் மட்டுமே உள்ளனர். இதனால் நோயாளிகளை சரிவர நோயாளிகளை கவனிக்க இயவில்லை. எனவே உடனே கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், பிரேத பரிசோதனை கூடத்தை செயல்படுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய 100 நாள் வேலையை வழங்க வேண்டும். சென்னை, திருச்சி செல்ல ஏதுவாக செந்துறையில் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 100க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாருவதில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுபாசந்திரசேகர், ஞானமூர்த்தி, செல்வராஜ், விஸ்வநாதன், சிவபிரகாசம், சிவபாஸ்கர், எழில்மாறன், காளமேகம் மற்றமட் விசிக, மதிமுக, தவாக, இந்திய ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : demonstration ,Secular Progressive Alliance ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்