பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்

தா.பழூர் செப் 10: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கழுந்தோண்டி கிராமத்திலிருந்து தேவமங்கலம் கிராமம் துரைராஜ் என்பவரது இல்லத்திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வாடகை வேன் பேசி கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள உறவினர்கள் சிலாலிருந்து தேவாமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தேவமங்கலம் சுடுகாட்டுக்கு அருகே சென்றபோது எதிரே வந்த பைக்கிற்கு வழி விடுவதற்காக ஒதுக்கிய போது எதிர்பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தில் விழுந்தது. இதில் வேனில் பயணம் செய்த கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜன் மனைவி மேகலா (29), சவுந்தரபாண்டியன் மனைவி மாலதி(29), ரவிக்குமார் மனைவி தேவி (48), மணிகண்டன் (35), வெங்கடேசன் மனைவி கஸ்தூரி (62), ஜோதி மனைவி சித்ரா (25), பாண்டியன் மனைவி இளவரசி (32), கண்ணன் மனைவி செல்வகுமாரி(45), சின்னப்பன் மனைவி சரோஜா (50), செல்வராஜ் மனைவி ஜெயம் (55), செல்லப்பன் மனைவி மலர்க்கொடி(40), ராமசாமி மனைவி வளர்மதி(50), கண்ணன் மனைவி செல்வராணி(40), சின்னையன் மனைவி சரோஜா (50), கோவிந்தன் மனைவி சின்னம்மாள் (62), சந்திரசேகரன் மகன் சஞ்சய் (16), நடராஜன் மகன் ராமச்சந்திரன் (18), இளையநாதன் மகன் அஸ்வின் (5) கொண்டான்குடி சுந்தரபாண்டியன் மனைவி வசந்தா (19) உள்ளிட்ட 16 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து அவர்களை மீட்டுஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 வயது சிறுவன் அஸ்வின் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து தா.பழூர் போலீசார் வேன் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் வாரியங்காவல் குமார் ( 30) என்பவரை தேடி வருகின்றனர்.

Tags : Van ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே விபத்து...