வேதாரண்யத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற தொகை பள்ளிக்கு வழங்கல்

வேதாரண்யம் செப்.10:வேதாரண்யத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் விருது தொகை பத்தாயிரத்தை பள்ளிக்கு புரவலர் நிதியாக வழங்கினார்.
தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இந்து தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்திக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. விருதுபெற்ற ஆசிரியர் தட்சிணாமூர்த்தி அமைச்சர் ஓ.எஸ்.மணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார். விருதுபெற்ற ஆசிரியரை வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், தாமோதரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.விருது பெற்ற ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தான் பெற்ற விருதுக்கான தொகை பத்தாயிரத்தை தான் படித்த பைத்தவரன்காடு சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளி மற்றும் தான் பணியாற்றும் தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து) ஆகிய பள்ளிகளுக்கு புரவலர் நிதியாக வழங்கினார்.

Tags : school ,teacher ,Vedaranyam ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி ஆசிரியை கணவருடன் கைது