சீர்காழியில் 3 மாதமாக பூட்டியே கிடக்கும் அம்மா குடிநீர் விற்பனை மையம்

சீர்காழி, செப்.10: நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா குடிநீர் விற்பனை நிலையம் கடந்த 3 மாதங்களாக இழுத்து மூடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து குடிநீர் பாட்டில்கள் வந்து அரசு போக்குவரத்து கழக மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுவது நிறுத்தப்பட்டு எல்லா ஊர்களிலும் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
மிக குறைந்த விலையில் ரூ.10க்கு 1 லிட்டர் அம்மா குடிநீர் கிடைக்காததால் ரூ.20 கொடுத்து தனியார் மினரல் வாட்டரை வாங்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அம்மா குடிநீர் பாட்டிலை சென்னையில் தயாரிக்காமல் அந்தந்த மாவட்டங்களில் தயாரிக்கலாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த சிறப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று. எனவே உடனே பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Liquor Store ,Sirkazhi ,
× RELATED தாய், மகன் மீது தாக்குதல்