மயிலாடுதுறையில் சோகம் விரைந்து தூர்வார கோரிக்கை சீர்காழி அருகே திருக்குர காவல் சிவபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

சீர்காழி, செப்.10:சீர்காழி அருகே திருக்குர காவல் சிவபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சீர்காழி அருகே திருக்குர காவல் கிராமத்தில் குண்டல கர்ணேஸ்வரர் ஏலா சவுந்தரி உடனாகிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலம். இக்கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கும் சிவ பக்த ஆஞ்சநேயர்க்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அர்ச்சகர் நடராஜ சுவாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Thiruvananthapuram ,pooja ,Shivpakta Anjaneyar ,police station ,Thirukkural ,Sirkazhi ,
× RELATED மத்திய அரசு ஒதுக்கிய தொகையில் திருநர்களுக்கு ஒரு பைசாகூட கிடைக்கவில்லை