2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை உருக்கமான கடிதத்தை படித்த கணவன் கண்ணீர்

மயிலாடுதுறை, செப்.10: மயிலாடுதுறை அருகே புற்றுநோய் தாக்கத்தால் தன் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாயின் உருக்கமான கடிதத்தை படித்த கணவர் கண்ணீர்விட்டு அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடமட்டம் அப்துல் ஆரிப்(32). மனைவி நிலோபர் பர்வீன்(27) தம்பதியினர் கத்தார் நாட்டில் இருந்துள்ளனர். 4 வயதில் அப்ரினாவும் ஒன்னரைவயதில் ஆஃப்ராவும் என இரண்டு குழந்தைகள் இருந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன் தனது மாமனார் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு தம்பதியினர் வந்திருந்தனர். அப்துல்ஆரிப் மட்டும் கத்தார் நாடு சென்றுவிட்டார். இதற்கிடையே உடல்நிலை பாதிக்கப்பட்ட பர்வீனுக்கு, உடல் மெலிந்தும் தலைமுடி கொட்டிவந்த நிலையில் ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் புற்றுநோய் அதிகரித்துள்ளதை தெரிந்துகொண்டார். இதனால் வேதனையடைந்த பர்வீன், தான் தாய் இல்லாமல் பட்ட சிரமத்தை எண்ணிப்பார்த்து தற்கொலை முடிவு எடுத்ததுடன், தன் குழந்தைகளும் தாய் இல்லாமல் தவிக்கக்கூடாது என்று 7ம் தேதி இரவு தனது சகோதரிக்கு செல்போன்மூலம் கூறியுள்ளார். சகோதரி அதற்கு ஆறுதல் வார்த்தை கூறினார். இந்நிலையில் அன்று இறவே தன் குழந்தைகளைக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார். நேற்றுமுன்தினம் காலையில் அவரது சகோதரி போன்செய்தபோது செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகுதான் இந்த சம்பவம் தெரியவந்தது. பாலையூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணி விசாரணை மேற்கொண்டார்.

நிலோபர்பர்வீன் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் கிடைக்கப்பெற்றது அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, எனக்கு தலைவலி, மயக்கம் ஏற்பட்டு அவதிப்படும் போதெல்லாம் வீட்டில் சாதாரன தலைவலின்னு சொல்லி நார்மல் செக்கப் பண்ணி மாத்திரை சாப்பிட்டு வந்தேன், டெஸ்ட் பண்ணிப் பார்க்கும்போது எனக்கு பிரெயின்ட்யூமர் என்று தெரியவந்தது. ஒவ்வொருநாளும் அவதிப்பட்டு சாகுரதவிட ஒரு நிமிஷம் கஷ்டப்பட்டு போயிடலாம். நான் வாழ முடியாத இந்த உலகத்தில் என் குழந்தைகளும் வாழமுடியாது நான் இல்லாம குழந்தைங்க ஏங்கி தவிர்க்கிறத என்னால நினைச்சிக்கூட பார்க்க முடியல, என் கணவர் என்ன நினைச்சி ஒவ்வொருநாளும் வேதனைப்படுறத என்னால் பார்க்க முடியாது. நல்ல கணவரை கொடுத்த ஆண்டவன் அவர்கூட நீண்டகாலம் வாழுறதுக்கு குடுத்து வைக்காம பண்ணிட்டான் என்று எழுதியிருந்தார். இந்நிலையில் நேற்று காலை பர்வீனின் கணவர் அப்துல்ஆரிஃப் கத்தாரிலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு சென்று தனது மனைவி குழந்தைகளின் சடலத்தைப்பார்த்து கதறி அழுதார். தன் மனைவி எழுதி வைத்த கடிதத்தைப் படித்து நிலைகுலைந்துபோன அவர் தொடர்ந்து கண்ணீர் மல்க அழுதுகொண்டே இருந்த அவர் யாரும் சமாதானப்படுத்த இயலவில்லை. இதனால் அங்கு சோகமே நிறைந்திருந்தது.

Tags : suicide ,
× RELATED ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக...