மாணவர்களுக்கு நோட்டு வழங்கல்

திருச்செந்தூர்,  செப். 10: திருச்செந்தூர் அருகே காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளியில், குருஜோதி ஆசிரமம் கல்வி சமூக பொருளாதார அபிவிருத்தி  அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுகள், சிலேட்டுகள்  மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை மேனேஜிங் டைரக்டர் மாரிமுத்து சுவாமிகள்,  டிரஸ்டி செந்தில்வேல் ஆகியோர் இதனை வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியை  இருதயஆரோக்கிய ஜெயந்தி, ஆசிரியை ராஜலட்சுமி மற்றும் ஆசிரம நிர்வாகிகள்,  மாணவர்கள் கலந்து கொண்டனர். ரெட் டிராகன் கராத்தே பயிற்சியாளர்  செந்தில்ஆனந்தன் நன்றி கூறினார்.Tags :
× RELATED நெட் பிரச்னையால் ஆதார்,வாக்காளர்...