இந்து சமய பண்பாட்டு போட்டி சீர்காட்சி பள்ளி சாதனை

உடன்குடி, செப். 10: உடன்குடி வட்டார பள்ளிகளுக்கான இந்து சமய பண்பாட்டுப் போட்டிகளில் சீர்காட்சி செந்திலாண்டவர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தா கேந்திரம் சார்பில் இந்து சமய பண்பாட்டுப் போட்டிகள், உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளியில் நடந்தது. இதில் பல்வேறு வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில், சீர்காட்சி செந்திலாண்டவர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முத்துசெல்வி, முத்து சரண்யா, மகாலட்சுமி ஆகியோர் முதல் பரிசும், மாணவி முத்துசெல்வி ஒப்புவித்தல் மற்றும் பாட்டுப் போட்டியில் முதலிடமும், மாணவிகள் ஜெயலட்சுமி, இன்சா, வைஷ்ணவி, முத்துவேல் ஆகியோரும் இரண்டாம் மற்றும் மூன்றாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஜெயசிங், தலைமை ஆசிரியர் தங்கஇசக்கி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: