×

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

செஞ்சி, செப். 10: செஞ்சி அடுத்த சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுமிக்கும், சத்தியமங்கலத்தை சேர்ந்த வாலிபருக்கும் வரும் 12ம் தேதி திருமண செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ மற்றும் சமூக நலத்துறை அலுவலர் பிரபாவதி, சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் ஆகியோர் மணமகள் வீட்டிற்கு சென்று பெற்றோர்களை அழைத்து 18 வயது முன்  திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என எடுத்துக் கூறி திருமணத்தை நடத்த கூடாது அறிவுரை வழங்கினர். இதனால் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.


Tags :
× RELATED 45 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்