திருக்கோவிலூர் திருமண மண்டபத்தில் நூதன முறையில் மொய் பணம் பறிப்பு

திருக்கோவிலூர், செப். 10: திருக்கோவிலூர் திருமண மண்டபத்தில் நூதன முறையில் மொய் பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருக்கோவிலூர் அருகே துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் ஆறுமுகம் (50). சம்பவத்தன்று இவரது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி திருக்கோவிலூர் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அங்கு ஆறுமுகம் மொய் பணம் வசூல் செய்து நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது சந்தப்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த பாஸ் மகன் ரஜினி (34), குண்டுமணி மகன் கமல் (32), சேகர் மகன் சூர்யா (18) ஆகிய 3 பேரும் பைக்கில் அங்கு வந்துள்ளனர். ரஜினி, சூர்யா 2 பேரும் பைக்கில் அமர்ந்திருந்த நிலையில் கமல் இறங்கி வந்து ஆறுமுகத்திடம் மொய் வைக்கப்போவதாக கூறி சில்லரை கேட்டுள்ளார். ஆறுமுகம் பணம் எண்ணிக் கொண்டிருந்த போது, திடீரென மொய் பணத்தை பிடுங்கிய கமல், பைக்கில் தயாராக இருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தப்பியோடிவிட்டார்.இதுகுறித்து ஆறுமுகம் திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து கமல், ரஜினி, சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : wedding hall ,
× RELATED பணம் கேட்டு மிரட்டியவர் கைது