கள்ளக்குறிச்சியில் துணிகரம் பெருமாள் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி

கள்ளக்குறிச்சி, செப். 10: கள்ளக்குறிச்சி நகர் மத்தியில் அமைந்துள்ளது பெருமாள் கோயில். இங்கு தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயில் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் சுந்தர்ராஜன் என்பவர் கோயில் கதவை திறக்க வந்தார். ஆனால் அவரால் கதவை திறக்க முடியவில்லை. இத்தகவல் அறிந்து வந்த கோயில் பூசாரி மற்றும் பொதுமக்கள் கோயில் அருகில் உள்ள மாடிவீட்டின் மீது ஏறி பார்த்தனர். அப்போது கோயில் கதவின் உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், அறநிலையத்துறை அலுவலர் லோகு ஆகியோர் கோயில் சுவற்றின் மேல் ஏறி கோயிலுக்குள் சென்று பார்த்தனர்.அப்போது மர்மநபர்கள் கோயில் வளாகத்தில் உள்ள மின் விளக்கை அணைத்திருப்பது தெரியவந்தது. ேமலும், கோயிலில் இருந்த 3 சிசிடிவி கேமராவையும் வானத்தை நோக்கி மர்ம ஆசாமிகள் திருப்பி விட்டுள்ளனர்.   கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டை சூலாயுதம், கட்டுகல் ஆகியவற்றால் உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் மர்ம ஆசாமிகளால் உண்டியலை உடைக்க முடியவில்லை. இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் உள்ள கோயிலில் மர்ம ஆசாமிகள் துணிகரமாக கொள்ளையடிக்க முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Kallakurichi ,Virakaram Perumal ,
× RELATED கள்ளக்குறிச்சி மக்களின் 15 ஆண்டு கால...