உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்

விழுப்புரம், செப். 10: உயிருக்கு பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் காதல்ஜோடி தஞ்சமடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போந்தை கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் ஏழுமலை(25) என்பவரும், ஆனத்தூரைச் சேர்ந்த சரளாவும்(19) செஞ்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனிடையே ஏழுமலை வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சரளா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறொரு இடத்தில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கடந்த 3ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய காதல்ஜோடி நேற்றுமுன்தினம் மயிலம் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக்கூறி நேற்று இருவரும் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து சரளா விழுப்புரம் எஸ்பியிடம் மனு அளித்தார். உயிருக்கு ஆபத்து இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி மனுவில் கூறியிருந்தார்.Tags :
× RELATED ஆற்று பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு