இளம்பெண் தூக்குபோட்டு சாவு

கள்ளக்குறிச்சி, செப். 10: கள்ளக்குறிச்சி அடுத்த ரோடு மாமாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வனிதா (25) பிஎட் பட்டதாரி ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளன. நேற்றிரவு வனிதா தனது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகள் தூங்கிய பின்னர், மாமியார் வீட்டிற்கு சென்று மாமியாருடன் வனிதா தூங்கியுள்ளார். பின்னர் நேற்று காலை சுமார் 6 மணியளவில் வனிதா தனது வீட்டிற்கு வந்தார். அங்கு கணவர், குழந்தைகள் தூங்கி கொண்டிருந்த நிலையில் வனிதா சிறிது நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அறிவழகனின் வீட்டிற்கு அவரது தம்பி வந்துள்ளார். அவர் வனிதா பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து தூங்கி கொண்டிருந்த அண்ணனை எழுப்பி உள்ளார். அவர் வனிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு கூச்சலிட்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் கயிற்றில் தொங்கிய நிலையில் இருந்த வனிதாவின் சடலத்தை கீழே இறக்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வனிதாவுக்கு திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் அவரது சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா என்பது குறித்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் காந்த் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் ஆகியோர் மேல் விசாரணை செய்து வருகின்றனர்.   

Tags :
× RELATED 4 வயது பெண் குழந்தையை தாக்கி மது...