மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி சிறுவன் கைது

திருக்கோவிலூர், செப். 10: திருக்கோவிலூர் அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த மாணவி கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதைக்கண்ட சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.இதுகுறித்து மாணவியின் தாயார் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து கடலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.


Tags : student ,
× RELATED கண்மாயில் மூழ்கி சிறுவன் சாவு