பூந்தமல்லியில் கிராம ஊழியர் சங்க மாநாடு

பூந்தமல்லி, செப். 10:  பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட மாநாடு பூந்தமல்லியில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், அரசு நிலம் மற்றும் தனியார் நிலங்கள் எங்கு உள்ளது என அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும். யாருக்கும்  பயப்படாமல் பணிகளை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். நீண்ட கால கோரிக்கையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராம ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.

Tags : Village Employees Union Conference ,Poonthamalli ,
× RELATED பூந்தமல்லி அருகே கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்