திருத்தணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பயிற்சி

திருத்தணி, செப். 10: வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழு அலுவலகம் இயங்கி வருகிறது. பேரிடர் மீட்புக்குழு கமாண்டர் ரேகாநம்பியா உத்தரவின்  பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார்வாத்  தலைமையில் 15 வீரர்கள் பத்து மோப்ப நாய்களுடன் திருத்தணி - அரக்கோணம் சாலை அரசு போக்குவரத்து பணிமனை அருகில் கற்கள் உடைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு  வந்தனர். அங்கு உடைக்கப்பட்டு இருந்த கற்களில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது பூகம்பம் மற்றும் பேரிடர் இடிபாடுகளில் பெரியளவில் உள்ள கட்டடங்கள் சரிந்து விழும்போது இடிபாடுகளில்   சிக்கியுள்ளவர்களை எவ்வாறு கண்டுபிடித்து மீட்பது குறித்து வீரர்கள் மற்றும்  மோப்ப நாய்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு அடையாளம் மோப்ப நாய்கள் மூலம் காண்பிக்கப்படுகிறது என ஒத்திகையும் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் குமார்வாத் கூறுகையில், “அரக்கோணம் அடுத்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவில் மொத்தம் 21 நாய்கள் உள்ளன. தற்போது 10 நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.  பூகம்பம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை அடையாளம் காணும் காணுவதற்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை நான்கு முறை மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளித்து  அனுப்பியுள்ளோம்.” என்றார்.

Tags : National Disaster Rescue Team ,
× RELATED திருத்தணியில் கராத்தே போட்டி