ஆழ்துளை கிணறு அமைப்பு திமுக எம்.பிக்கு பொதுமக்கள் நன்றி

பள்ளிப்பட்டு, செப். 10: ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது.  இதுகுறித்து ராஜாநகரம் திமுக ஊராட்சி செயலாளர் பிச்சாண்டி தலைமையில்  அப்பகுதி மக்கள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனிடம் முறையிட்டனர். அவர் திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலரிடம் தொடர்புகொண்டு உடனடியாக ராஜாநகரம் பகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்குமாறு வலியுறுத்தினார். அதனடிப்படையில் நேற்று முன்தினம்  ராஜாநகரம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.  இதையடுத்து அவருக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பி.பழனி, சி.என்.சண்முகம், ஜி.ரவீந்திரா, ஆர்த்தி ரவி, திருத்தணி நகர செயலாளர்  எம்.பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,
× RELATED வெண்ணந்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு