விஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு

காஞ்சிபுரம், செப்.10: தையூர் கிராம மக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.செங்கல்பட்டு வருவாய் கோட்டம் புதுப்பாக்கம் விஏஓவாக பணிபுரியும் பொன்னுதுரை என்பவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தையூர் கிராம விஏஓவாக இருந்தார். அப்போது, அவர் அலுவலகத்துக்கு சரியான  நேரத்துக்கு வருவதில்லை.மாணவர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக சாதி சான்றிதழ், முதியோர் பென்ஷன், விதவை உதவித்தொகை பெற மனுவில் கையெழுத்து வாங்க அலுவலகத்தில் பல மணிநேரம் காத்துக்  கிடப்போம். விஏஓ பொன்னுதுரை பகல் 12 மணிளவில் அலுவலகத்துக்கு வந்து 2 மணிக்கு திரும்பி சென்றுவிடுவார்.அந்த 2 மணிநேரத்தில்கூட பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மாட்டார்.  அலுவலகத்தை திறந்து பைல்களை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே போவதாக கூறிவிட்டு ரியல் எஸ்டேட் மற்றும் அபார்ட்மென்ட் உரிமையாளர்களுடன் சென்றுவிடுவார்.

வரி செலுத்தச் சென்றால் செலுத்தவேண்டிய வரியைவிட கூடுதலான தொகை கேட்பார். கொடுக்க மறுத்தால் பில்புக் இல்லை. அவசரமாக வெளியே செல்வதால் பழைய பில்லை எடுத்துவாங்க என அலைக்கழிக்க  செய்வார்.மேலும் பினாமியாக சிலரை வைத்துக் கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால், எப்போதும் அவர்களுடன்தான் இருப்பார். அவர் வழக்கறிஞருக்கு படித்துள்ளதால் அதிகாரிகளே என்மீது நடவடிக்கை  எடுக்க பயப்படுவார்கள் என பொதுமக்களிடம் அலட்சியமாக பேசுவார்.தையூரில் பணிபுரிந்த பணி காலத்தில் தன்னுடைய பணியினை சரிவர செய்யாத பொன்னுதுரை, கவுன்சிலிங் மூலம் மீண்டும் தையூர் கிராமத்துக்கு மாற்றல் பெற்று வருகிறார் என்பதை அறிந்து மிகவும் வேதனை  அடைகிறோம்.எனவே, பொதுமக்களாகிய எங்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களுக்காக பணியாற்றக் கூடிய ஒரு அலுவலரை எங்கள் கிராமத்துக்கு பணியிட மாற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம் என  கூறப்பட்டுள்ளது.

Tags : VA ,
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...