கடை நிலை ஊழியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம், செப்.10: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள அறிவிப்பு. கலெக்டர் அலுவலகம், சப் கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் காலியாக உள்ள 16 கடைநிலை ஊழியர்  பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, இந்த பதவிக்கு 18 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் 35. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32. பொதுப் பிரிவினருக்கு 30 வயது இருக்க வேண்டும். வயது வரம்பு அரசு விதிகளின்படி 01-07-2019 அன்று நிர்ணயம் செய்யப்பட்ட வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பள விகிதம்  ₹ 15700  50000.
விருப்பமும். தகுதியும் உள்ளவர்கள் கல்வி தகுதி. வயது. நிரந்தர முகவரி ஆகிய விவரங்களை இணைத்து மசால்சி பணி விண்ணப்பம் என்று குறிப்பிட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட  கலெக்டர் அலுவலகம். காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நாட்கள்...