திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அதிகாலையில் பரபரப்பு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் சாலை மறியல்

திருச்சி, செப்.5: திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் அதிகாலை பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் மத்திய பகுதியில் திருச்சி பஸ் நிலையம் அமைத்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, தேனி ராமநாதபுரம் உள்பட பல்ேவறு பகுதியில் இருந்து வரும் பயணிகள் திருச்சி வந்துதான் சென்னைக்கு செல்ல முடியும். நேற்று அதிகாலை 12 மணி முதல் 3 வரையில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லை. குறிப்பாக மதுரை, தேனி, கரூர், சேலம், கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை போன்ற நகரங்கள் செல்ல போதிய பஸ் இல்லாத காரணத்தால் பயணிகள் அவதியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி மணிகண்டன் பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி பஸ் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்த பின்னர் பயணிகள் கலைந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: