துறையூரில் தினமும் ஒரு மணி நேரம் இருளில் மூழ்கி கிடக்கும் அரசு மருத்துவமனை வளாகம் நோயாளிகள் அவதி

துறையூர், செப்.5: துறையூர் அரசு மருத்துவமனை வளாகம் தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருளில் மூழ்கி வருகிறது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.துறையூர் அரசு மருத்துவமளையில் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் ரூ.3 லட்சம் செலவில் மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கோபுர விளக்குகள் தானியிங்கி மின்விளக்காக செய்துவிட்டதால் இரவு 7.15 மணிக்கு எரிய தொடங்கி காலை 6 மணிக்கு தனாகவே நின்றுவிடும். தற்போது மாலை 6 மணிக்கே இருட்டிவிடுவதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அரசு மருத்துவமனை இருளிலில் மூழ்கி இருக்கின்றன. இதனால் புறநோயாளிகள், அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நோயாளிகளை பார்க்க வருபவர்கள் இருட்டில் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே மாலை 6 மணிக்கு மின்விளக்கு எரிவதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என புறநோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: