இந்திய மேலாண்மை கழகம் முன் ஒப்பந்த காவலாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர், செப்.5: திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் பாதுகாப்பு பணிகளை தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் மூலம் கடந்த 2015ம் ஆண்டு முதல் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து மற்றொரு புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பணியாற்றி வரும் காவலாளிகள் 55 பேரும் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் புதியதாக ஒப்பந்த காவலாளிகளை பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த காவலாளிகள் தங்களது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த காவலாளிகளை பணி நீக்கம் செய்யாமல் தொடர்ந்து அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடர்ந்து 4வது நாளாக குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாள் கண்டன ஆர்ப்பாட்டமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் உண்ணாவிரத போராட்டமும், இதனை தொடர்ந்து நேற்று வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதற்கு சிஐடியூ தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்து நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: