பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் பொதுமக்கள் அவதி

திருச்சி, செப்.5: திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடியதால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.திருச்சி மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடையில் அடைப்புகளை நீக்க ஆங்காங்கே இடைவெளி விடப்பட்டுள்ளது. குறிப்பாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிப்பறை கழிவுகள், குளியலறை கழிவுநீர் உள்ளிட்டவைகள் பாதாள சாக்கடையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடை திட்டம் முறையாக பராமரிப்பின்றி செயல்படுத்தி வருவதால் திருச்சி மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக கழிவுநீர் சென்று வரும் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக கழிவுநீர் சாலைகளில் தினந்தோறும் வெறியேறி வருகிறது. இதனால் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக கழிவுநீர் பெருகி சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசியும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: