தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நாளை நடக்கிறது லால்குடி அருகே செம்பரை கிராமத்தில் ஏரி தூர்வாரியபோது ஐம்பொன் சிலை மீட்பு

லால்குடி, செப்.5: லால்குடி அருகே செம்பரை கிராமத்தில் ஏரியில் குடிமராமத்து பணிக்காக தூர்வாரியபோது ஐம்பொன் சுவாமி சிலை கண்டெடுத்து மீட்கப்பட்டது.லால்குடி அருகே செம்பரை கிராமத்தில் உள்ள பிள்ளையார்குளத்தில் ஊராட்சி ஒன்றியம் சார்பாக குடிமராமத்து பணியில் தூர்வாருதல் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்று மாலை பணிகள் முடிவுறும் நேரத்தில் பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக தூர்வாரும் பணி நடந்து வந்தது. அப்போது குளத்தின் ஒரு பகுதியில் மண் தோண்டும்போது திடீரென சிலை இருப்பது போன்ற அறிகுறி தென்பட்டது. உடனே சிலையை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது முழு உருவமாக சிலையை வெளியே எடுத்து சுத்தம் செய்து பார்க்கையில் சோமஸ்கந்தர் சிலை என பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஆர்ஐ அன்பரசன், விஏஓ ராம்குமார் ஆகியோர் சிலையை மீட்டெடுத்து சிலையை எடைபோட்டு ஆய்வு செய்தபோது 49 கிலோ எடை உள்ளதாகவும் இவை ஐம்பொன் சிலையாக இருக்கலாம் என தெரிவித்தனர். உடனடியாக தாசில்தார் சத்தியபாலகங்காதரன், துணை தாசில்தார் முருகன், சிலைகளை கைப்பற்றினர். முன்னதாக சிலையை கண்ட ஊர் பொதுமக்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து அபிஷேகம் செய்தனர். இச்சம்பத்தை அறிந்த செம்பரை, அரியூர், முள்ளால், அன்பில் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பொதுமக்கள் திரளாக கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: