புதிய கட்டிடத்துக்கு அனுமதி பெறவேண்டுமெனில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

திருச்சி, செப்.6: திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து தனியார் கட்டிடங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கான கட்டமைப்பு வசதி அவசியம் மேற்கொள்ளப்பட்டு நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த வேண்டும் என்பது அரசின் கொள்கையாகும்.எனவே இனி வரும்காலங்களில் பொதுமக்கள்/வரி விதிப்பாளர்கள் மாநகராட்சியி–்ல் புதிதாக சொத்து வரிவிதிப்பு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் பெயர் மாற்றம் விண்ணப்பிக்கும்போதும் மற்றும் கூடுதல் கட்டிட அனுமதி கோரும்போதும், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி, அதற்கான புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். எனவே மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தி, மழைநீரை சரியான முறையில் சேமித்து அனைவரும் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்திட உதவ வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: