திருச்சி சிறையில் உள்ள முகிலன் இன்று மதுரை கோர்ட்டில் ஆஜர்

திருச்சி, செப்.5: திருச்சி சிறையில் உள்ள முகிலன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கிற்காக இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கு மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக விசாரணை நடந்து வருகிறது. இதில் 10வது எதிரியாக இருந்த முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனதால் அவர் மீதான வழக்கு தனி வழக்காக பிரிக்கப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தநிலையில் கடந்த மாதம் அவர் மீட்கப்பட்டு வேறொரு புதிய வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நிலுவையில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கிற்காக இன்று திருச்சி சிறையிருந்து முகிலன் மதுரை நீதிமன்றம் அழைத்து செல்லப்படுகிறார். முகிலன் காணாமல் போன பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வழக்கிற்காக ஆஜராவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: