அரியாற்றில் மணல் கடத்தல் 3 டிராக்டர்கள் பறிமுதல்

திருச்சி, செப்.5: திருச்சி அருகே அரியாற்றில் மணல் கடத்திய 3 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருச்சி அருகே அரியாவூர் அரியாற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மணல் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ. அரங்கநாதன் தலைமையிலான போலீசார் நேற்று காலை அரியாறு பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு 3 டிராக்டர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓடிவிட்டனர். டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்து ராம்ஜிநகர் போலீசில் ஒப்படைத்தனர். ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: