மோட்டார் வாகன சட்டத்திருத்தம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து துறை

புதுச்சேரி,  செப். 5:    நாடு முழுவதும் செப்டம்பர் 1ம்தேதி முதல் மோட்டார் வாகன விதி  சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி போக்குவரத்து மற்றும் சாலை  விதிமீறல் குற்றத்திற்கான அபராதம், தண்டனை விவரம்  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இதற்கான அரசாணை  வெளியிடப்பட்டு போக்குவரத்து துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.  ஆனால் தமிழகம், புதுவையில் அரசுகள் இவ்விவகாரத்தில் முனைப்பு காட்டவில்லை.

Advertising
Advertising

இதனிடையே புதுச்சேரி கடற்கரை பகுதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில்  போக்குவரத்து துறை சார்பில் புதிய மோட்டார் வாகன சட்ட  திருத்தம் தொடர்பான  விவரங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளன. அதில், வாகன ஓட்டிகள்  எந்தெந்த குற்றங்களில் ஈடுபட்டால் பழைய தண்டனை என்ன, புதிய சட்டத்தின்படி  முதல்குற்ற அபராதம், 2வது குற்ற அபராதம் என்னென்ன என்பது அதன் சட்டப்  பிரிவுடன் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் முதல்கட்டமாக இதுபோன்ற பதாகைகள் போக்குவரத்து துறை  சார்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், மாநில அரசின் ஒப்புதல் கிடைத்து  அரசாணை வெளியான பிறகே இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் மீது புதிய மோட்டார்  வாகன சட்டப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories: