18 ஆசிரியர்களுக்கு விருதுகள் புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி, செப். 5:   ஆசிரியர் தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சிறந்த 18 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், புதுச்சேரியின் நான்கு மண்டலங்களின், பல்வேறு நிலைகளில்  பணிபுரியும் சிறந்த ஆசிரியர் சமுதாயத்தினரை பாராட்டும் வகையில் சிறந்த ஆசிரியர் விருதுகள் புதுச்சேரி அரசால் வழங்கப்படுகின்றன. இவ்வருடமும்  பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்தம் சிறந்த பணியினை  பாராட்டி மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி டாக்டர்.  ராதாகிருட்டிணன் விருது - தொடக்க நிலை பிரிவு, இடைநிலைப் பிரிவு,  முதலமைச்சரின் சிறப்பு விருதுகள் - மொழி ஆசிரியர், பெண் ஆசிரியைகள்,  தொழில்நுட்ப ஆசிரியர், கல்வி அமைச்சர் வட்டார விருதுகள்- புதுச்சேரி,  காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு மண்டலங்களில் உள்ள வட்டார  தேர்வுக்குழுவிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதிலிருந்து  ஆசிரியர்கள் பல்வேறு விருதுகளுக்கு மாநில தேர்வு குழுவின் மூலம் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.

மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்  ஆற்றிய பணி. கற்றுவித்தலில் மேற்கொண்ட புதுமையான வழிமுறைகள் மற்றும்  செய்முறைகள், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள்,  பள்ளியின் உள் கட்டமைப்பை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் நிகழ்வுகள்,  பள்ளியின் சுகாதாரம் பேணுதல் மற்றும் “தூய்மை சேவை” நடவடிக்கையில்  மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமுதாயத்தினரை ஈடுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள்  ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டன. விருதுகளின் பட்டியல்:  டாக்டர் எஸ். ராதாகிருட்டிணன் விருது

(தொடக்கநிலைப் பிரிவு)
1. வளர்மதி, தொடக்கக் கல்வி ஆசிரியர், எக்கோல் ஆங்கிலோ அரசு தொடக்கப்பள்ளி, புதுச்சேரி.
2. ரேவதி, தொடக்க கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளி, வில்லியனூர்.
இடைநிலை பிரிவு
1. கருணாகரன், விரிவுரையாளர், ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி, காராமணிக்குப்பம்.
2. பாலசுப்ரமணியன், தலைமையாசிரியர் நிலை, கோவிந்தசாமி பிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்கால்.
முதலமைச்சரின் சிறப்பு விருதுகள்
(மொழி ஆசிரியர்)
1. மேகலா, பட்டதாரி ஆசிரியர், பெரியார் அரசு மேனிலைப் பள்ளி, கோவில்பத்து, காரைக்கால்.
பெண் ஆசிரியை
1. சந்தோஷ் லூர்துமேரி, பட்டதாரி ஆசிரியர், டி.கே.ஆர் அரசு உயர்நிலைப்பள்ளி, தேங்காய் திட்டு, புதுச்சேரி.
2. அருள்மொழி பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைபள்ளி, கணுவாப்பேட்டை, புதுச்சேரி.
3. முனியம்மாள் பட்டதாரி ஆசிரியர், முருகாத்தாள் ஆச்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி காரைக்கால்.
4. ராதா, தலைமை ஆசிரியர் அரசு தொடக்கப்பள்ளி, பெரியப்பட்டு, காரைக்கால்.
தொழில்நுட்ப ஆசிரியர் கூட்டாக வழங்கப்படுகிறது
1. முனைவர் முகுந்தன் இசையாசிரியர், அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, முதலியார்பேட்டை.
2. சிந்த்தா ராமகிருஷ்ணா, உடற்கல்வி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கனக்கலப்பேட்டடா, ஏனாம்.
கல்வி அமைச்சர் வட்டார விருதுகள்
(புதுச்சேரி)
1. முனைவர் ஜெயசீலன், பயிற்றுநர், என்,கே.சி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, குருசுக்குப்பம், புதுச்சேரி.
2. சந்திரன், விரிவுரையாளர், இந்திரா காந்தி அரசு மேனிலைப் பள்ளி, இந்திரா நகர், புதுச்சேரி.
3. ஜான் போஸ்கோ, பட்டதாரி ஆசிரியர், பண்டிட் துரைசாமி அரசு உயர்நிலைப்பள்ளி, லாஸ்பேட்டை.
4. சரவணன், விரிவுரையாளர், சுசிலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெத்துசெட்டிபேட்டை, புதுச்சேரி.
(காரைக்கால்)
1. அன்பரசன், பட்டதாரி ஆசிரியர், ஹுசைனியா அரசு உயர்நிலைப்பள்ளி, நிரவி, காரைக்கால்.
2.அழகுநிலா, பட்டதாரி ஆசிரியர், முருகாத்தாள் ஆச்சி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, காரைக்கால்.
(மாகே)
1.தினேஷ், தலைமையாசிரியர் (தொடக்க நிலை), அரசு கீழ்நிலை தொடக்க நிலைப்பள்ளி, மாகே.
(ஏனாம்)
டாங்கெட்டி திரிமூர்த்தலு, பட்டதாரி ஆசிரியர், பி.கே. அரசு உயர்நிலைப்பள்ளி, ஏனாம்.
  விருதுகள் அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நாளை நடைபெறும் ஆசிரியர் தின  விழாவின்போது முதல்வர் நாராயணசாமி விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

Tags :
× RELATED அரசு மகளிர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு