தூக்கு போட்டு வாலிபர் சாவு

திண்டிவனம், செப். 5: திண்டிவனம் ஏகாம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்த ஆனந்தவிநாயகம் மகன் ஆகாஷ் (20). ஐடிஐ எலக்ட்ரீசியன். இவர் நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க செல்வதாக பாட்டியிடம் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுள்ளார். நேற்று காலை 8 மணி வரை அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் தட்டினர்.ஆனால் நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து அறைக்குள் சென்றனர். அப்போது மின்விசிறியில் நைலான் கயிறு மூலம் தூக்குப்போட்டு ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து உறவினர்கள் ரோசணை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரோசணை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: