ஆதிதிராவிட பள்ளி அருகே தேங்கிய கழிவுநீர் அகற்றம்

ரிஷிவந்தியம், செப். 5: ரிஷிவந்தியம் ஏந்தல் கிராமம் அருகே உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளியின் பின்புறத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கும், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட அதிகாரிகள், அங்கு தேங்கியிருந்த கழிவு நீரை அப்புறப்படுத்தியதுடன், பள்ளங்களில் மண்ணை கொட்டி சமப்படுத்தினர்.

இதனால் அப்பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertising
Advertising

Related Stories: