பைக்கில் இருந்து விழுந்து விவசாயி சாவு

உளுந்தூர்பேட்டை, செப். 5: கள்ளக்குறிச்சி அருகே விருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர்  ஜெயக்குமார்(54) விவசாயி. நேற்று முன்தினம் அவர் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு ஒரு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டு இருந்தார். உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்த போது  திடீரென நிலைதடுமாறி பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ஜெயக்குமார் மனைவி பாரதி(51) கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: