சாலை விபத்தில் முதியவர் பலி

திண்டிவனம், செப். 5: செஞ்சி தாலுகா அருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (65). இவர் திண்டிவனத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அடுத்த விழுக்கம் கூட்ரோடு அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த கார் இரு சக்கர வாகனத்தில் மோதியது.

Advertising
Advertising

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரோசனை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: